Diploma Semester Mark Sheet Latest update | Polytechnic Semester Mark sheet Update | Diploma Mark Sheet 2021 | Diploma Mark sheet 2020

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான Mark Sheet பற்றிய முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 2020 மற்றும் அக்டோபர் 2020 காண தேர்வுகளை டிசம்பர் 2020 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் யார் யாருக்கு வந்துள்ளது என்பது பற்றிய முழுமையான தகவலை தான் நாம் பார்க்க போகிறோம்.

தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பாக மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் ஒவ்வொரு கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதில் முதல்கட்டமாக மாணவர்களுக்கு

1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
3.Semester Mark sheet
என வழங்கப்பட்டு வருகின்றது.


கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
என இந்த இரண்டு வகையான மதிப்பெண் சான்றிதழ் ஆனது முதற் கட்டமாக ஏப்ரல் 2020 க்கு தேர்வு கட்டணம் செலுத்தி அவர்களுக்கும் பிறகு அக்டோபர் 2020 தேர்வு கட்டணம் செலுத்தி அவர்களுக்கும்  வழங்கப்பட்டது.
தற்போது இந்த இரண்டு வகையான மார்க்சீட் களும்
1.Provisional Certificate
2.Consolidate Mark Sheet (Over all Mark)
அனைத்து கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இதில் பெரும்பாலான கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். மீதமுள்ள மாணவர்கள் நீங்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு உங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வந்து விட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளவும்.
Semester Mark sheet:
தற்போது கல்லூரிகளுக்கு மாணவர்களின் Grace chance மாணவர்களுக்கு Semester Mark Sheet  அஞ்சலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த Semester Mark sheet ஒவ்வொரு பகுதியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற் பகுதியாக  D-Scheme, G-Scheme, J-Scheme மாணவர்களுக்கும் K-Scheme Register No. 23 முதல் 29 வரை ஆரம்பிக்கக் கூடிய மாணவர்களுக்கு Semester Mark sheet DOTE மூலம் கல்லூரி வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.
எனவே மாணவர்கள் தங்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு தங்களுடைய Semester Mark sheet வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு கல்லூரிக்கு சென்று தங்கள் சான்றிதழை வாங்கிக் கொள்ளவும்.

Diploma Mark sheet: 
பட்டய சான்றிதழ் Diploma mark sheet Print செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது. எனவே இரண்டு மாதங்களுக்குள் கல்லூரிகளுக்கு Diploma Mark sheet அனுப்பி வைக்கப்படும் என தெரிகின்றது.

Semester Marksheet:
டிப்ளமோ மாணவர்களுக்கான Combined Mark sheet ஆனது October 2019 முதலிருந்தே வழங்கப்படாமல் உள்ளது. எனவே இந்த மதிப்பெண் சான்றிதழ் கிடைப்பதற்கு கால அவகாசம் அதிகமாகும் என தெரிகின்றது மேலும் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ஆனது ஆன்லைனில் வாங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts

கருத்துரையிடுக