விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் பிறகு குளித்துவிட்டு வீட்டு வாசலில் மாவிலையில் தோரணம் கட்ட வேண்டும்,மாவிலை ஆனது மகாலக்ஷ்மியின் அம்சமாகும்.
முதலில் விநாயகரை மனதில் நினைத்து நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன், எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் என்னுடைய விரதத்தை நிறைவு செய்ய அருள்புரிய வேண்டும் என பிரார்த்தனை செய்ய வேண்டும்.
விநாயகர் கோவில் செல்லும் வாய்ப்பு இருந்தால் விநாயகரை 11 முறை வலம் வரவேண்டும் அருகம்புல் கொடுத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்து நெற்றிப்பொட்டில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.
கோவிலுக்கு சென்று வீட்டுக்கு வந்ததும் ஒரு ஆழாக்கு பச்சரிசியை ஊறவைத்து அத்துடன் சிறிது வெல்லம் தூள் செய்து வாழைப்பழத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து பசுவுக்கு கொடுத்து பசு வழிபாடு சேர்த்து செய்தாள் கூடுதல் நன்மை தரும்.
பூஜை அறையை நன்றாக கழுவி மோழுகி கோலம் போடவும், அதன் மையப்பகுதியில் ஒரு பலகையை வைத்து கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசியை பரப்பி நம் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு "ஓம்"என்று எழுதி மண் பிள்ளையாரை வைக்க வேண்டும்.
களிமண்ணினால் பிள்ளையார் ஏன் வைக்க வேண்டுமென்றால் பூமியிலிருந்து கிடைக்கும் அனைத்தும் பூமிக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே களிமண்ணினால் பிள்ளையாரை வைத்து வழிபட வேண்டும்.
பிள்ளையாருக்கு பலவகை பூக்கள் கொண்ட கதம்பம், வெள்ளெருக்கம்பூ, அருகம்புல், சாமந்தி, மல்லி, முல்லை,தாமரை என பல வகை பூக்கள் வைத்து அலங்காரம் செய்யலாம்.
பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் செய்ய அவருக்கு மிகவும் பிடித்த மோதகத்தை கொழுக்கட்டையை வைத்து படைக்க வேண்டும். கொழுக்கட்டையில் உள்ள எல்லா வகையான கொழுக்கட்டையும் தேங்காய் வெல்லம் சேர்த்த கொழுக்கட்டை, வேர்க்கடலை வெல்லம் சேர்த்த கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, பருப்பு கொழுக்கட்டை என வகைவகையான கொழுக்கட்டை செய்யலாம்.
பழங்களில் ஆப்பிள், சாத்துக்கொடி, விளாம்பழம், கொய்யாப்பழம், மாதுளை, பேரிக்காய், வாழைப்பழம் முதலிய எல்லா பழங்களையும் வைத்து வழிபடலாம் அதனுடன் அப்பம், சுண்டல், அவல், பொரிகடலை, எள்ளுருண்டை, கரும்பு, தேங்காய் வைத்து படைக்கலாம்.
விநாயகரை வழிபடும் போது உங்களுக்குத் தெரிந்த விநாயகர் திருநாமங்கள் சொல்லி வழிபடலாம் விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் மந்திரங்கள் சொல்லி வழிபடலாம் விநாயகர் அகவல், கவசம், சகஸ்ரநாமம், காரியசித்தி மாலை, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் முதலியவர்களை பாடுவது மிகவும் நற்பலன்களைத் தரும்.
அதிகாலையில் எழுந்து உணவு ஏதும் அருந்தாமல் பூஜைகளை முடித்து விநாயகரை வணங்கி பிறகு சாப்பிட்டு உங்கள் விரதத்தை முடித்தாள் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் தந்து நமக்கு அருள் புரிவார் அந்த ஆணைமுக விநாயகர்.
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமனரூப மகேஸ்வர புத்திர
விக்ன வினாயக பாத நமஸ்தே.
என்ற ஸ்லோகத்தை சொல்லி வணங்கினாள் எல்லா சங்கடங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களை பெறலாம்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிறப்புடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பெரும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள், காரிய அனுகூலம் உண்டாகும் இடையூறு விலகும் பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
நன்றி
கருத்துரையிடுக
கருத்துரையிடுக