வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எவ்வாறு சரிபார்ப்பது | Information in tamil



1.1.2021-ல் 18 வயது நிறைவடைந்தவர்கள் அல்லது 31.12.2002-க்கு முன்பாக பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை புதிதாக சேர்க்க மனு அளிக்கலாம். வரும் 20-ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ மனு அளிக்கலாம். வரும் 21, 22, 12, 13-ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள்  நடைபெறும். 



தங்கள் முகவரிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை மனுக்களை நேரில் அளிக்கலாம். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in (National Vetification Service Portal) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்த வாய்ப்பை தகுதியுள்ள அனைவரும் பயன்படுத்தி வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20.1.2021-ல் வெளியிடப்படும்.

Related Posts

கருத்துரையிடுக