இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஜனவரி 14ஆம் தேதி ஆவணியாபுரம்,
ஜனவரி 15ஆம் தேதி பாலமேடு ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் கிருஷ்ணகிரி தேனி திருப்பூர் புதுக்கோட்டை சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை செயலர் கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது விலங்குகள் தடுப்பு சட்டத்தின்கீழ் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா, ஆகியவற்றை ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதிக்குள் பின்வரும் பகுதிகளில் நடத்த ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியபாளையம், புத்தூர், உலகம்பட்டி, ஏ.வெள்ளோடு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிபட்டினம், அலசீபம், செம்படமுத்தூர், குப்பச்சிப்பாறை.
தேனி மாவட்டத்தில் பல்லவராயன் பட்டி,
திருப்பூர் மாவட்டத்தில் அழகுமலை,
புதுக்கோட்டையில் விராலிமலை, கண்டிப்பட்டி, குன்றக்குடி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Key word : #Jallikattu #Avaniyapuram Jallikattu #Alanganallur Jallikattu #Jallikattu Daily update #Today Jallikattu #Jallikattu 2021 #palamedu jallikattu #jallikattu news tamil
கருத்துரையிடுக
கருத்துரையிடுக