கோவின் ஆப் எவ்வாறு ரிஜிஸ்டர் செய்வது மற்றும் தேவையான அடையாள அட்டைகள் என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.
கோவில் செயலியில் பதிவு செய்தவர் கோரணா தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. என்பது அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள் தடுப்பு மருந்து போடப்படுகிறது இதற்காக மத்திய அரசின் டிஜிட்டல் தளமான கோவில் செயலி மூலம் பதிவு செய்வதற்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்த செல்பேசி செயலி மூலம் தடுப்பூசி தொடர்பான பயனாளர்களின் பதிவுகள் பராமரிக்கப்படும்.
இதில் பதிவு செய்ய மூன்று வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் சுய பதிவு தனிப்பட்ட பதிவு தொகுப்பு பதிவு பதிவு செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம்.
புகைப்பட அடையாள அட்டை:
சுய பதிவு செய்வோம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், தபால் அலுவலக பாஸ் புத்தகம், ஓய்வூதிய ஆதார கடிதம், அரசு ஊழியர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
இவற்றைக்கொண்டு இகேஒய்சி எனப்படும் பயனாளிகளை அறிந்துகொள்ளும் படிவத்தை பயனாளி நிரப்பவேண்டும். கோவின் செயலியில் பதிவு செய்தபிறகு பயனாளியின் செல்பேசி எண்ணுக்கு covid-19 தடுப்பூசி போடப்படும் இடம்,தேதி, நேரம், ஆகிய தகவல்கள் வரும் கோவின் செயலில் ஐந்து வகை பதிவுகள் உள்ளன.
அமர்வுகள்
நிர்வாகி தொகுதி பதிவு, தொகுதி தடுப்பூசி தொகுதி, பயனாளியின் தொகுதி, அறிக்கை தொகுதி, ஆகியவையாகும் இவற்றில் நிர்வாகி தொகுதி தடுப்பூசி அமர்வில் ஈடுபடுவதற்கான பதிவு தொகுதி மூலம் பதிவு செய்த நபர்களில் தகவல்களை நிர்வாகி பெறுவார். அதன் பிறகு அவர்கள் அமர்வுகளை ஏற்பாடு செய்வார்கள் தடுப்பூசி போடுவதற்கான தகவல் மற்றும் எச்சரிக்கைகள் போன்ற தகவல்களை பகிர்வார்கள்.
புதுப்பிக்கும் விவரம்
தடுப்பூசி தொகுதியில் கோவின் பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்து அவர்களின் தடுப்பூசி செயல்முறையை புதுப்பிக்கும் விவரம் பதிவாகும் பயனாளி தொகுதியில் தடுப்பூசி பெறுவோரின் விவரங்கள் தடுப்பூசி விவரங்கள் பதிவேற்றப்படும் அறிக்கை தொகுதியில் எத்தனை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது போன்ற விவரம் பதிவேற்றப்பட்டு பயனாளிக்கு கியூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து சான்றிதழ் வழங்கப்படும்.
தற்போதைய சூழலுக்கு இவற்றை அனைத்து தரப்பினரும் பயன்படுத்த முடியாது அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போது தான் இதில் பதிவு செய்ய முடியும் தடுப்பதற்காகவே இந்த செயலியை அரசு உருவாக்கியுள்ளது.
மேலும் விவரம் பெற மேலே உள்ள வீடியோவை பார்க்கவும்
இது போன்ற பயனுள்ள தகவல்கள் பெற எங்கள் டெலகிராம் குழுவில் இனையவும். https://t.me/joinchat/Fdwrq36sEnrehj7L
கருத்துரையிடுக
கருத்துரையிடுக