அரசு முத்திரைத்தாள் விற்பனையாளர் உரிமம் பெறுவது எப்படி

 அரசு முத்திரைத்தாள் விற்பனையாளர் உரிமம் பெறுவது எப்படி...?


நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக தேவையை பொறுத்து காலியிடம் இருந்தால் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.


💥 முத்திரை சட்ட விதி 25(1)(சி) படி முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களுக்கான தகுதிகள்  கீழ்கண்டவாறு:-


* எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


* 18 வயது முதல் உச்ச வயதில்லை. முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதிக்கான  தாசில்தார் வழங்கிய இருப்பிடச் சான்று, உடல் தகுதி காண்(கண் பார்வை நிலை உட்பட).


* அரசு டாக்டர் வழங்கிய சான்று, சொத்து மீதான செல்வ நிலை சான்று(தாசில்தார் வழங்கியது).


* பிணையமாக காட்டப்படும் சொத்து மீது வில்லங்கம் இல்லையென உரிய பதிவு அலுவலர் வழங்கிய சான்று

ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். 


* முன்னாள் ராணுவத்தினர், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் (உரிய சான்று வழங்கியது) ஆதி திராவிடர், பழங்குடியினர் (தாசில்தார் வழங்கியது) விதவைகள்(தாசில்தார் வழங்கியது) ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


💥 விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை:-


* போதிய கல்வித்தகுதி, முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதியில் வசித்தல், உடல் தகுதி, செல்வநிலை சான்று (solvency certificate) விபரங்களுடன் விண்ணப்பங்கள் இருத்தல் வேண்டும்.


* முத்திரைத்தாள் விற்பனை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் கோரி ஒவ்வொரு மாவட்ட பதிவாளருகம் தங்கள் பகுதிக்குட்பட்ட சார்பதிவகங்களில் உள்ள இடங்களில் வெளியிடப்பட வேண்டும். 


* அவ்வாறு வெளியிடப்படும் அறிவிப்புகள் மாவட்ட பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவகங்கள், கிராமச்சாவடி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் சார் ஆட்சியர்/கோட்டாட்சியர் அலுவலகம், துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகம், கிராம செயல் அலுவலர் அலுவலகம் போன்றவற்றில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஓட்டி விளம்பரப்படுத்தப்படும்.


* விண்ணப்பங்களை பரிசீலித்து முழு விவரங்களற்ற விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும்.


* தகுதியுள்ள நபர்களுக்கான நேர்முகத்தேர்வு அழைப்பு கடிதம் அனுப்பு் போது, நேர்முக தேர்விற்கு குறைந்தபட்சம் 1 வாரம் முன்னதாக அஞ்சல், விண்ணப்பதாரர்களை சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்கப்படும்.


* நேர்முகத்தேர்வின் போது அசல் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்.


* நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் நியமனம் செய்யப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்படும்.


* முத்திரைத்தாள் விற்பனையாளர் நியமனம் செய்யப்பட்டபின், நியமனம் செய்யப்பட்டோரின் முழு விவரம் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு உயர் அலுவலர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

Related Posts

கருத்துரையிடுக