குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம்.. ரேஷன் கார்டில் "இந்த" குறியீடுகள் இருந்தால் போதும்!
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம் எப்போதும் அமல்படுத்தப்பட்டால் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான கொரோனா நிவாரம் ரூ 4000 கொடுக்கப்பட்டுவிட்டது. அடுத்தது மாதாமாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டத்தை தொடங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.
இந்த திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் குடும்பத் தலைவியின் பெயர் ரேஷன் அட்டையில் இருந்தால் மட்டுமே ரூ 1000 கிடைக்கும் என புதிய தகவல் பரவியதால் குழப்பம் நிலவி வருகிறது.
*குடும்பத் தலைவி*
இதனால் பலர் குடும்பத் தலைவர் பெயர் உள்ள கார்டுகளை குடும்பத் தலைவி பெயரை மாற்ற ஏராளமான விண்ணப்பங்கள் உணவுப் பொருள் விநியோகத் துறைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் இதுவரை ரேஷன் கார்டே இல்லாதவர்கள் கூட ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்து வருகிறார்கள்.
*ரூ 1000*
ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவி இருந்தால் மட்டும்தான் இந்த 1000 ரூபாய் கிடைக்குமா, இந்த திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் உபயோகத்தில் இருக்கும் ஸ்மார்ட் கார்டுகளில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகையான குறியீடுகள் இருக்கின்றன.
*முறைகேடுகள்*
ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் இந்த குறியீடுகள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் PHH என்ற குறியீடு இருந்தால் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். அது போல் PHH- AAY என இருந்தால் 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம்.
அரிசி
பொருட்கள்
NPHH என இருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். NPHH-S என இருந்தால் அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். NPHH-NC என இருந்தால் எந்த பொருளும் கொடுக்கப்படமாட்டாது. ரேஷன் கார்டை ஒரு அடையாள அட்டை, முகவரிச் சான்றிதழாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
*யாருக்கெல்லாம் கிடைக்கும்*
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 1000 ரூ திட்டம் NPHH-S, NPHH-NC என்ற குறியீடு போட்டுள்ள கார்டுகளுக்கு கிடைக்காது. மற்ற குறியீடுகளுக்கு நிச்சயம் கிடைக்கும். எனவே யாரும் தேவையின்றி பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக