டோக்கியோ
ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இன்று பங்கேற்றார். இதில் வீரரகள் 6 முறை முயற்சி செய்யவேண்டும் இதில் அதிக தூரம் பதக்கத்திற்கு தேர்வு செய்யப்படும். முதல் 3 சுற்றுகளுக்குப் பிறகு, 12 விளையாட்டு வீரர்கள் களம் 8 ஆகக் குறைக்கப்படும் பின்னர் 4 பேராக குறைக்கப்படும்.
இதில் தனது முதல் முயற்சியாக நீரஜ் சோப்ரா 87.03 மீ எறிந்தார். இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் எறிந்தார். மூன்றாவது முயற்சியில்
76.79மீட்டர் எறிந்து உள்ளார்.
நீரஜ் சோப்ரா முதல் 4 முயற்சிகளில் முதல் இடம் பிடித்து இருந்தார். 2வது இடத்தில் ஜூலியன் வெபர் மற்றும் 3வது இடத்தில் ஜாகுப் வாடிலெஜ் இருந்தனர்.
5வது சுற்றிலும் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்தார்.
6-வது சுற்றிலும் முதல் இடத்தை பிடித்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இந்தியாவின் முதல் தங்கம் இதுவாகும்.
2008 ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் அபினவ் பிந்த்ரா; 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது.
ஒலிம்பிக் தடகளத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
அரியானாவின் பானிபட் மாவட்டத்தில் பிறந்த 23 வயதான நீரஜ் சோப்ரா, அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு உலகத் தரம் வாய்ந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய விளையாட்டு வீரர் ஆவார். 2016 ஆம் ஆண்டில் போலந்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் யு - 20 உலக சாம்பியன்ஷிப்பில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
2016 ஆம் ஆண்டிலேயே, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 82.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் பின்னர், 2017 ஆம் ஆண்டில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பிலும் 85.23 மீட்டர் வரை ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக