அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கிவங்கி முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கி வாடிக்கையாளர் களுக்கும் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போது ரிசர்வ் வங்கிக்கு அதிக அளவில் மோசடி புகார்கள் வருவதை ஒட்டி ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு விபரங்கள், இணையதள வங்கி கணக்கு  விபரம், ஏடிஎம் கார்டு நம்பர், ஏடிஎம் பின் நம்பர், மொபைல் OTP முதலிய விபரங்களை மற்றவர்களிடம் மொபைல் எஸ்எம்எஸ் இ-மெயில் உள்ளிட்டவைகள் மூலமாக பகிர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் வங்கிக் கணக்கு கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் மற்றும் உங்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது அவற்றுக்கான கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட எந்த வகையான அழைப்புகள் வந்தாலும் வாடிக்கையாளர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்று பல்வேறு மோசடி புகார்கள் தற்சமயம் அதிக அளவில் நடப்பதாக ரிசர்வ் வங்கிக்கு அதிகமான புகார்கள் வருவதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

#BANK_NEWS
#Reserve_Bank

Related Posts

கருத்துரையிடுக