விராட் கோலி T20 கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவி இருந்து விலக இதுதான் முக்கியக் காரணம்

விராட் கோலி T20 கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவி இருந்து விலக இதுதான் முக்கியக் காரணம்

கடந்த 2017 ஆம் ஆண்டு கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த உடன் T20 போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகு இந்திய அணியின் டெஸ்ட் போட்டி, ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக  விராட் கோலி இந்நாள்வரை உள்ளார்.

அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் டி20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி திடீர் முடிவை அறிவித்துள்ளார்.
கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தொடங்குவதற்கு தெரிவித்துள்ள முக்கிய காரணம் இதுதான்

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி20 உலக கோப்பை போட்டி  கேப்டன் பதவியில் இருந்து விளக்கப் போகிறேன்.
இதுகுறித்து இந்திய அணியில் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியவர்களுடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுகுறித்து பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தேர்வு குழு தலைவர் கங்குலி ஆகியவர்களுடன் பேசிவிட்டேன்.
இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்த விரும்புகிறேன்.
20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்.

நான் இந்தியாவுக்கு ஆகவும் இந்திய கிரிக்கெட் அணிக்காக சேவை செய்ய விரும்புகிறேன். கடந்த 5 - 6 ஆண்டுகளாக தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து வருகிறேன் எனது பணிச்சுமையை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்.

கிரிக்கெட் அணி கேப்டனாக எனது பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்

Related Posts

கருத்துரையிடுக