10th Supplementary Exam Result 2021 | 10th Supplementary Exam Result 2021 in tamilnadu

10th Supplementary Exam Result 2021 | 10th Supplementary Exam Result 2021 in tamilnadu

10th Supplementary Exam Result 2021 
10th Supplementary Exam Result 2021 in tamilnadu
10th Supplementary Exam Result 2021 Date 
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு கடந்த செப்டம்பரில் 2021 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு துணை தேர்வு நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசானது அறிவிப்பாணைய வெளியிட்டது.
மற்ற மாணவர்களுக்கு தனி தேர்வானது அந்தந்த பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வானது கொரோனை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
தேர்வுகள் முடிவடைந்ததும் விடைத்தாள் திருத்தும் பணி யானது மேற்கொள்ளப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவு மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆனது ஏற்பாடுகளை செய்துள்ளது அதன்படி இன்று 19.11.2021 காலை 11 மணி அளவில் மாணவர்கள் கீழே உள்ள இந்த வெப்சைட் மூலம் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

மாணவர்கள் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன்
1.Notification
2.SSLC Examination
3.Provisional Mark sheet
4.SSLC Result Sep 2021

கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் மாணவர்கள் தங்களுடைய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
செப்டம்பர் 2021 தேர்வுக்கு மறுகூட்டல் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களுக்குரிய முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று இரண்டு நாட்களில் விண்ணப்பிக்கலாம் 22.11.2021 & 23.11.2021 உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல் (Retotal) கட்டணம்:
பாடம் ஒன்றுக்கு ரூபாய் 205 கட்டணம்.

முக்கிய குறிப்பு:
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் செல்லும்போது கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மேலும் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லவண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

கருத்துரையிடுக